November 30, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் மேயராக முதல் சீக்கிய பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் முதல் பெண் மேயராக ப்ரீத் டிட்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சீக்கிய இனத்தை சேர்ந்தவர்.இவர் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி பதவியேற்கவுள்ளார். சீக்கிய இனத்தை சேர்ந்த பெண், அமெரிக்க நாட்டின் மேயர் பதவியை ஏற்கும் பெருமை இவரையே சேரும்.
கடந்த 2014ம் ஆண்டு, யூபா நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் யூபா நகரின் துணை மேயராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.