• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரை கெளரவித்த கூகுள் டூடுல்

December 9, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரான ஹோமை வியாரவல்லாவின் 104வது பிறந்தாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

இந்திய நாட்டின் முதல் பெண் பெண் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமை வியாரவல்லா ஆவார். அவருடைய 104வது பிறந்த நாளை முன்னிட்டு இணையதளமான கூகுள் நிறுவனம் அதன் டூடுல் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

கடந்த 1913ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 9ம் தேதி, குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி என்னும் இடத்தில் பிறந்த அவர், டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றிய மனேக்க்ஷா ஜம்ஷெட்ஜி
வியாரவல்லா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 1930 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள “The Illustrated Weekly of India” என்ற பத்திரிக்கை நிறுவனத்தில், தனது பணியை தொடங்கினார்.ஆரம்பத்தில், அவரது படங்கள் அவர் கணவரின் பெயரில் வெளியிடப்பட்டன.

அதன் பிறகு, கடந்த 1942ம் ஆண்டு, தன்னுடைய குடும்பத்தினருடன் புதுதில்லிக்கு குடிபெயர்ந்தார்.
காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல இந்தியத் தலைவர்களின் புகைப்படங்களை எடுத்த பின்னர் தான் அவரது பணி அங்கீகரிக்கப்பட்டது.

கடந்த 2012ம் ஆண்டு, ஜனவரி மாதம் 15ம் தேதி, தனது 98வது வயதில் காலமானார்.கடந்த 2011ம் ஆண்டு, அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க