• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வனப்பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

October 22, 2016 தண்டோரா குழு

“மலைகளின் அரசி” என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.

ராஜ்குமார் (மாவட்ட வன அலுவலர்) கூறியதாவது:

தீபாவளி பண்டிகையின் போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடுவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பது வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாலும், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துள்ளதால் வனப்பகுதிகள் வறண்டு காய்ந்து காட்சியளிக்கிறது.
இதனால், எளிதில் தீப் பிடித்துக் கொள்ளும் என்பதால் முதுமலை சுற்றியுள்ள 18 மலைக்கிராமங்களிலும், வடக்கு வனக்கோட்டம், தெற்கு வனக்கோட்டம் முதல் தெங்குமரஹாடா வரையிலான பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள தனியார் சுற்றுலாப் போக்கிடங்கள் (ரிசார்ட்), சுற்றுலாக் குடில்கள் (காட்டேஜ்) ஆகியவற்றில் கூட தீபாவளி பண்டிகையைப் பட்டாசு வெடித்துக் கொண்டாட முடியாது. மேலும் வனத்துறையினர் ரோந்துப் பணியிலும் ஈடுப்பட உள்ள நிலையில் அத்து மீறுபவர்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தா்.

புஷ்பகுமார் (கோத்தர் இன பழங்குடியினர்) கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வனப்பகுதிகளை ஒட்டியே வசித்து வருவதால் தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்தால் வனவிலங்குகள் இடம் பெயரும் அபாயம் இருப்பதாலும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் இந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம்.

இளங்கோ (மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர்) கூறியதாவது

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதாலும், வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாக இருப்பதாலும் அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை வெடித்தால் வனவிலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும். எனவே, வெடித்து சத்தம் வரும் பாட்டாசுகளை வெடிக்காமல் சத்தம் வராத வாணங்களை சிறியவர்கள், மாணவர்கள் வெடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சத்தம் இல்லாத பட்டாசுகளை வெடித்தால் நோயாளிகள், முதியவர்களுக்குப் பாதிப்பு இருக்காது. இது விஷயத்தில் பட்டாசு கடைகள் வைத்திருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். கடைகளில் பொதுமக்கள் பாதிப்பு தராத பட்டாசுகளைத் தவிர வேறு எதையும் விற்கக்கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைக்க வேண்டும். கடைகளில் தீத் தடுப்புக் கருவிகளையும் முதலுதவி வசதிகளையும் வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டால் டார்ச் லைட்டுகள் வைத்திருக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் பட்டாசுகள் விற்பனை செய்வோர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று கூறினார்.

மேலும் படிக்க