சென்னையில் பெண்கள் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டி வந்த போலி சி.பி.ஐ அதிகாரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் அடுத்த பெசண்ட் நகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியின் மேல் வீட்டில் தங்கியிருப்பவர் தாமோதரன் (27).
இவர் சமீப காலமாகத் தனது வீட்டின் கீழே நடைபெற்று வந்த பெண்கள் விடுதியில் உள்ள குளியலறையில் கைப்பேசியை வைத்து பெண்கள் குளிப்பதை ஆபாசமாகப் படமெடுத்துள்ளார்.
பின்னர் சம்பந்தப்பட்ட பெண்களிடையே அதைக் காட்டி அதிக பணம் பெற்றதுடன், தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
இந்தத் தகவல் விடுதி நிர்வாகிக்குத் தெரிய வரவே, நிர்வாகி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாமோதரனைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.அப்போது தான் ஒரு சி,பி.ஐ.அதிகாரி எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவன் மீது சந்தேகம் வரவே, அவனைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் அவன் நாமக்கல்லைச் சேர்ந்தவன் எனவும், பல மாதங்களாக இது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அவனிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட, சி.பி.ஐ அதிகாரி, வழக்கறிஞர், உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இது போன்ற செயலில் இவன் மட்டும் தான் ஈடுபட்டானா அல்லது பலர் உள்ளனரா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவன் பயன்படுத்தி வந்த சைரன் வைத்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்