• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம்

December 27, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் இனி பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் எண்ணைக் கேட்டுப்பெறும் நடைமுறையை, அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தபடும் சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கை இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. எனினும் இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது.

இதனால் போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

பயனர்கள் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதி மட்டும், ஸ்கிரீன் ஷாட் மூலம் கேட்டுப் பெறப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.பயனர்களின் இயற்பெயரையே, ஃபேஸ்புக்கிலும் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்தவே ஆதார் பெயரை கேட்டுப்பெறும் நடைமுறையை செயல்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நண்பர்களும், உறவினர்களும் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. எனினும், இந்த நடைமுறை விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் பேஸ்புக் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க