• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியல் கட்டாய பாடம்

September 17, 2016 தண்டோரா குழு

பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடம் ஆக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு, அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இயற்க்கை சுற்றுசூழல் குறித்த பாடத்தை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த உத்தரவு இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்படுத்தப்படவில்லை என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அம்மனு, உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடமாக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மனிதவள மேம்பாடு (மனிதவள மேம்பாடு அமைச்சகம்) எங்கள் திசைகளில் இணக்கமாய் இருக்க முகமையாக இருக்கட்டும். அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை மனிதவளத்துறை ஒரு பொதுவான மேடையில் அனைத்து பங்குதாரர்களின் கொண்டு வரட்டும்.

எங்களுடைய உத்தரவை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட விசாரணையை வரும் 23ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க