December 17, 2016
தண்டோரா குழு
இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 146 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய அணியின் பார்த்திவ் பட்டேல், கே.எல். ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.