• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யானைகளுடன் வாழப் பழகிக்கொள்வோம்…

November 9, 2018 நேயப்பிரியன்

மனிதன் மட்டுமே தனது வாழ்விடத்தை தானே அழித்துக்கொள்ளும் குணம்படைத்தவன், இப்போது மற்ற ஜீவராசிகளின் வாழ்விடத்தையும் ஆக்கிரமித்து கொண்டு அவற்றின் அழிவிற்கும் வித்திடதொடங்கிவிட்டான். குறிப்பாக யானைகளை குறிவைத்து இந்த வேலை துவங்கியுள்ளது. “காடு” என்பது விலங்களின் “வீடு” இதை புரிந்துகொள்ளாமல் நாம் அங்கு குடியேறி காட்டை அழித்து விவசாயம் செய்வது, சுற்றுலா தளம் அமைப்பது. விடுமுறை ரிசார்டுகளை கட்டுவது என எல்லை மீறி இயற்கை அழித்துவிட்டோம், அழித்துக்கொண்டும் இருக்கிறோம். காட்டுக்குள் நாம் நுழைத்தால் விலங்குகள் நாட்டுக்குள் நுழையும் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம் என்பது இயற்கை ஆர்வலர்களின் கூற்று.

கடந்த சில வாரங்களாக யானை-மனித மோதல் கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு வனஊழியர் உள்பட 3 பேர் யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுபவை மேற்கு தொடர்சி மலையின் ஒரு சிறு பகுதியான ஆனைக்கட்டி வனப்பகுதியைச் சுற்றியுள்ள சமூக காடுகள் காலப்போக்கில் விலைநிலைகளாக மாற்றப்பட்டதும் மனிதர்கள் ஆக்கிரமித்த பகுதிகளை தங்களின் நிரந்தரமான வாழ்விடங்களாகக் கொண்டு சின்னத்தம்பி மற்றும் விநாயகன் என்ற இரண்டு ஆண் யானைகள் இங்கேயே வசிப்பதுதான். பொதுவாக யானைகள் ஒரே இடத்தில் வாழ்பவை அல்ல அவை மாநிலங்களை கடந்து வலசை செல்பவை (இடம் பெயர்பவை). இயற்கைக்கு மாறாக இந்த இரண்டு யானைகளுமே கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட இரண்டு சரகங்களுக்குள் மட்டுமே இடபெயர்ந்து இங்கேயே வாழ்பவை. பெரும்பாலும் இந்த இரண்டு யானைகளுமே மலைவாழ் மக்களுக்கு செல்லப்பிள்ளைகளாகவும் பயிர்களை சேதப்படுத்தும்போது விவசாயிகளின் எதிரிகளாக உருவாகியுள்ளன.

மனிதவாழ்விடங்களாக மாறிப்போன வனத்தையொட்டிய நிலப்பகுதிகளில் இவை பிரவேசிப்பது தொடர்கதையாகிப்போன ஒன்றாக இருந்தாலும் காலம் காலமாக யானைகள் புழகத்தில் வைத்துள்ள நிலப்பகுதிகள் என்பதை மறுப்பதற்கில்லை. இது வரை மனிதர்களை தாக்காமல் இருந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி சமீபகாலமாக தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒரு சிலர் மேல் கொண்ட கடும் கோபத்தால் தங்கள் வழியில் குறுக்கிடுபவர்களை பந்தாடிவிடுகின்றன.
தொடர்ந்து விலைநிலங்களை சேதப்படுத்துவதும் மனித வாழ்விடங்களுக்கு நுழைவதும் விவசாயிகளின் கோபத்தை சம்பாதித்ததுமட்டுமல்லாம் இந்த இரண்டு யானைகளைப் பிடித்து வேறு இடத்தில் விடவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் மனு கொடுக்கும் அளவிற்கு போய்விட்டது தற்போதைய நிலை.

இந்த நிலையில் முதுமலை யானைகள் முகாமில் இருந்து விஜய் மற்றும் பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் கோவையில் வியாழக்கிழமை களம் இறக்கப்பட்டன. கும்கி யானைகளின் வரவு இயற்கை ஆர்வலர்களிடையே பெறும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு விநாயகன் மற்றும் சின்னதம்பியை பிடிப்பது தொடர்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மேஜைக்கு கோரிக்கை கடிதம் கோவை வனத்துறை அதிகாரிகளால் அனுப்பப்பட்டதே இதற்கு காரணம். ஒருவேலை இரண்டு காட்டு யானைகளைப் பிடித்து இடமாற்றம் செய்யத்தான் கும்கிகள் வந்துள்ளனவா என்ற ஐய்யம் எழுந்துள்ள நிலையில் விநாயகன் மற்றும் சின்னத்தம்பிக்கு ஆதரவாக வலைத்தளங்கள் மற்றும் முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இது குறித்து “ஓசை” அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறியதாவது:

யானை நடமாட்டம் உள்ள நேரங்களில் வனத்துறையின் வழிகாட்டுதலை மதிக்காமல் இரவு நேரத்தில் தனியாக வனத்தையொட்டிய பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்கள் இது போன்ற மனித-யானை மோதலுக்கு வழிவகுக்கின்றன. மேலும் பிரச்னைக்குறிய ஒரு யானைப் பிடித்து வேறு இடத்தில் கொண்டுவிடுவது இதற்கான நிரந்தர தீர்வாகாது. ஒன்றுக்கும் மேற்பட்ட யானைகள் மனித வாழ்விடத்தில் நுழைவதற்கான காரணத்தை யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வறிஞர்கள் மூலம் கண்டறிந்து குறிப்பிட்ட பிரச்னைக்குறிய யானையை அடயாளம் கண்டு அதற்கு ரேடியோ காலர் பொருத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பன்னிமடை சி.ஆர்.பி.ஃஎப் காவலர் பயிற்சி மையம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்கள், கல்வி நிறுவன கட்டடங்களை யானை வலசைப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தாமல் யானைகளைத் தொடர்ந்து இடமாற்றம் செய்வது முறையான அனுகுமுறையல்ல. ஆய்வுகள் மூலமே இதற்கு நிரந்தர தீர்வுகான வேண்டும், தவிர யானைகளை நாம் துன்புறத்தாதவரை அவை நம்மை அனாவசியமாக தாக்குவதில்லை. இரவு பகலும் வனஊழியர்களை நியமித்து அவைகளை தொடர்ந்து விரட்டியதே யானைகளுக்கு நம் மேல் கோபம் அதிகரித்து தாக்க காரணமாக அமைந்துவிட்டது.

யானைகளுக்கு எல்லைகள் தெரியாது, மனித ஆக்கிரமிப்புகளால் வழித்தடங்களை இழந்த யானைகள் மாற்று வழிதேடி மனித வாழ்விடங்களை கடந்து செல்லும்போது விவசாயப் பயிர்களான கரும்பு, சோளம், தென்னை மற்றும் வாழை போன்றவற்றை சுவைத்து அவற்றுக்கு அடிமையாகிவிட்டன.பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் யானைகளை வெடிவெடித்து துருத்துவதும் கண்ணில் படும்போது அவர்களை யானை தாக்குவதும் தொடர்கதையாகிவிட்டது.

இது குறித்து வனச்சரகர் கூறும்போது:

பிரச்னை கொடுப்பதாகக் கூறப்படும் காட்டு யானைகளை கும்கி உதவியுடன் வனத்திற்குள் விரட்டுவதுதான் தற்போதைய திட்டம். யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக இதுவரை மேலிடத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. யானைகளை இடமாற்றம் செய்வது ஒரு நிரந்தர தீர்வல்ல மேலும் இயற்கை ஆர்வலர்கள் அதிகளவில் உள்ள கோவையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு மதுக்கரை மகாராஜா விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள் என்றார்.

இது குறித்து மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:

வனப்பணியாளர்களைக் கொண்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஒரு பணியாளர் இறந்ததையொட்டி. இனி கும்கிகளைக் கொண்டு மேற்கண்ட பணி நடைபெறும் மற்றபடி எங்களுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளரிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்றார்.

“இதை முன்கூட்டியே செய்திருந்தால் உயிர்சேதத்தை தவிர்த்திருக்கலாம்” என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

மேலும் படிக்க