December 18, 2017
தண்டோரா குழு
பாஜக பலமாக உள்ள இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார்.
குஜராத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜகவே முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஹர்திக் படேல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்.சூரத், ராஜ்கோட், அகமதாபாத்தில் மின்னணு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன.பாரதிய ஜனதாவுக்கு 100க்கும் குறைவான இடங்கள் கிடைத்துள்ளதே எங்களுக்கு கிடைத்த வெற்றி தான்.பாஜகவுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடரும். பட்டேல் சமூகத்தினர் சரியான முறையில் வாக்களித்துள்ளதாகவும் பட்டேல் சமூகத்தினர் அளித்த பல ஓட்டுகள் கணக்கில்வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்”. இவ்வாறு அவர் பேசினார்.