• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 16ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல்

November 20, 2017 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ளது என டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த 1998ம் ஆண்டு கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்றார்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் 19 ஆண்டுகள் நீடித்துள்ளார்.இந்நிலையில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு,ராகுல் காந்தியை தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.

இதனையடுத்து,ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும், இந்த தேர்தலில் ராகுலை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவருக்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிச.4ம் தேதி வரை நடைபெறும்.தேர்தல் முடிவுகள் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க