December 12, 2017
தண்டோரா குழு
கன்னியாகுமரி ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.அப்போது,காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி இறுதி வரை தொடரும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறினார்.
மேலும்,உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கப்படும்.காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
: முதல்வர் பழனிசாமி
காணாமல்போன மீனவர்களை மீட்க உள்துறை அமைச்சரிடம் இரண்டு முறை கோரிக்கை வைத்தோம்