August 29, 2018
தண்டோரா குழு
இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க அறிவுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
புகையிலைப் பொருட்களுக்கு மாற்றாகஇன்றைய இளம் தலைமுறையினர் இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட எல்க்ட்ரானிக் நிகோடின் பொருட்களைப் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அண்மையில்,டெல்லி உயர்நீதிமன்றமும் நாட்டின் சுகாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தலாக
இ-சிகரெட்டுகள் உருவெடுத்திருப்பதாக கவலை தெரிவித்திருந்தது.
அதைபோல்,புகையிலையைப் போலவே எலக்ட்ரானிக் நிகோடின் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக,மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில்,இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் நிகோடின் புகைப் பொருட்களுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.