• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தீஸ்கரில் நக்சலைட்டு தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் பலி

October 30, 2018 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவர் உட்பட,இரு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர்.அவர்களுக்கு அவ்வபோது இந்திய பாதுகாப்பு படைப்படையினர் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையில்,சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 12 மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,இன்று தண்டேவாடா அருகே அரான்பூரில் ஊடுருவிய நக்சல் தீவிரவாதிகள்,அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற இரண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.பதிலுக்கு பாதுகாப்பு வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் நக்சல் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஒருவரும்,2 பாதுகாப்பு படைவீரர்களும்உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலைஉருவாகியுள்ளது.

இதைதொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த மூன்று தினங்களுக்கு முன்,பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில்,மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 4 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க