• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மு.க. ஸ்டாலின் சட்டை கிழிப்பு

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை தமிழக சட்டப் பேரவையில் கலந்துகொண்டபோது நடந்த அமளியில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. சட்டப் பேரவை வளாகத்திலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் 20 பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் சனிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது முதலே ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை அவர்கள் முற்றுகையிட்டதுடன். அவரது இருக்கை மற்றும் மைக் ஆகியவற்றையும் தி.மு.க. உறுப்பினர்கள் சேதப்படுத்தினர்.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவை 1 மணி வரை ஒரு முறையும் 3 மணி வரை இரண்டாவது முறையும் ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைக்கும் முன்னர், அவையின் மாண்புகளை குலைக்கும் வகையில் தி.மு.க. உறுப்பினர்கள் செயல்பட்டதாகக் கூறி அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சட்டப் பேரவைத் தலைவ ர் தனபால் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவையிலிருந்து வெளியேற மறுத்த திமுகவினர் அவைக்குச் செல்லும் பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேரவை வளாகத்தை விட்டு வெளியே வந்த ஸ்டாலின் பேரவையில் தான் தாக்கப்பட்டதாக நிருபர்களிடம் கூறினார். அவரது சட்டை கிழிக்கப்பட்டிருப்பதை நிருபர்கள் காணமுடிந்தது.

அதையடுத்து பேரவையில் நடைபெற்ற சம்பவங்களை ஆளுநரிடம் கூறுவதற்காக ஸ்டாலின் கிளம்பி சென்றார்.

மேலும் படிக்க