August 27, 2018
தண்டோரா குழு
திமுகவின் தலைவர் மு.க.அழகிரி என விக்கிபீடியா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திமுகவின் இணையதள விக்கிபீடியாவில் திமுக தலைவர் மு.க.அழகிரி என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் நாளை போட்டியின்றி தேர்வாகிறார் என்ற நிலையில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவ்வப்போது சில சர்ச்சை தகவல்கள் விக்கிபீடியா இணையதளத்தில் ஹேக்கர்களால் ஊடுருவி பதிவேற்றப்படுவது சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில்,திமுகவில் தங்களை இணைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மு.க அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.