August 29, 2018
தண்டோரா குழு
திமுக தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைடுத்து அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இதனையடுத்து,தலைவர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.
மேலும்,திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவராக பதவியேற்றுள்ள
மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் அவர்கள் பாதையில் திரு.ஸ்டாலின் அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும்,சிறப்புமாக வழிநடத்த வேண்டும்.திமுக இயக்கத்திற்கு தாங்கள் பெருமையையும்,புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”.என்று பதிவிட்டுள்ளார்.