August 28, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைடுத்து அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது.இதனையடுத்து,தலைவர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுச்செயலாளர் அன்பழகனால் வெளியிடபட்டது.அதைப்போல் பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து,அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே இருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அதைபோல் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மேலும்,திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
க.அன்பழகன் திமுக பொதுச்செயலாளர்
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்கள் பணி சிறக்க திமுக கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுக்கூடி இணைந்து செயல்பட வேண்டும் என க.அன்பழகன் தெரிவித்தார்.
முத்தரசன்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்
திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
மம்தா பானர்ஜி-மேற்குவங்க முதல்வர்
திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
திருமாவளவன்-விடுதலை சிறுத்தை கட்சி
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி-காங்கிரஸ் தலைவர்
திமுக தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்வதாக டிவிட்டரில் கூறியுள்ளார்
பொன்.ராதாகிருஷ்ணன்-மத்திய இணையமைச்சர்
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடமிருந்த பல ஆண்டுகளாய் பெற்ற பாடம், பல பொறுப்புகளில் அவர் பணியாற்றிய அனுபவம் ஆகியவை திமுகவிற்கு பயனுடையதாக அமையும் என நம்புகிறேன்.
பி.ஆர்.பாண்டியன்-அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர்
திமுகவின் நெருக்கடியான தருணங்களில் கருணாநிதிக்கு துணை நின்றவர் ஸ்டாலின்; கொள்கை ரீதியாக திமுகவில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நடிகர் விஷால்:திமுகவின் பெருமைகளை கட்டிக்காக்க தகுதியானவர் மு.க.ஸ்டாலின் தான்.
பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி:மு.க.ஸ்டாலினின் எதிர்காலம் சிறக்க வேண்டும்.
அதைப்போல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.