August 30, 2018
தண்டோரா குழு
கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் செப்.5ம் தேதி சென்னையில் பேரணி நடத்த உள்ளார்.இதற்காக மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் மு.க அழகரி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்.5ம் தேதி பேரணி நடைபெறவுள்ளது.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது பற்றி நான் கருத்து கூற ஒன்றுமில்லை என மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என அதிரடியாக மு.க அழகரி கூறியுள்ளார்.