August 28, 2018
தண்டோரா குழு
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினையும்,பொருளாளராக துரைமுருகனையும் கட்சியின் பொதுச்செயலாளா் அன்பழகன் அறிவித்தாா்.
திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து,அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது.இதனைத்தொடர்ந்து,தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது.இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும்,பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தலைவா் மற்றும் பொருளாளா் பதவிக்கு வேறு நபா்கள் போட்டியிடாததால் தலைவராக மு.க.ஸ்டாலினும்,பொருளாராக துரைமுருகனும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் தலைவா் கருணாநிதிக்கு இரங்கல் தொிவிக்கப்பட்டது.இதனைத் தொடா்ந்து கருணாநிதியின் படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.இதனைதொடர்ந்து அரியலூர் மாணவி அனிதாவின் மரணம்,திமுக ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன்,மறைந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி,மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,மறைந்த ஐ.நா.முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னன்,மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் கேரளாவில் மழை,வெள்ளம்,நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.