August 27, 2018
தண்டோரா குழு
திமுகவில் தங்களை இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் செப்.5ம் தேதி சென்னையில் பேரணி நடத்தவுள்ளார்.இதற்காக மதுரையில்,தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க,தமது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.கலைஞர் உயிருடன் இருந்த போது,தம்மை தி.மு.கவில் சேர்த்துக் கொள்வதாக கூறினார்.ஆனால் அதை சிலர் தடுத்துள்ளனர்.கருணாநிதி இருந்ததால் ஸ்டாலின் செயல் தலைவரான போது எதிர்க்கவில்லை.கருணாநிதி மறைந்துவிட்டதால் திமுகவை காப்பாற்றவே களம் இறங்கியுள்ளோம். திமுகவில் தங்களை இணைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்”.என எச்சரிக்கை விடுத்துள்ளார்.