August 10, 2018
தண்டோரா குழு
திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும்,திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும்.அப்போது,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்”.