• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு

August 27, 2018 தண்டோரா குழு

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்காக வேட்புமனு தாக்கல் 26ம் தேதி நடைபெறும் என்றும்,மனுக்களை வாபஸ் பெற 27-ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.இதில்,திமுக தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும்,பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,நேற்று வரை இரு பதவிகளுக்கும் ஸ்டாலின்,துரைமுருகனை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.இதனால்,அவர்கள் இருவரும் போட்டியிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இன்றைய தினம் மனுக்களை இருவரும் வாபஸ் பெறாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில்,

தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்கள் மனுக்களை வாபஸ் பெறும் காலம் முடிந்தும் அவர்கள் இருவரும் வாபஸ் பெறவில்லை மனுக்களை வாபஸ் பெறாததால் இரு பதவிகளும் போட்டியின்றி நிரம்புவது உறுதியாகிவிட்டது.எனினும்,நாளை திமுக பொதுக்குழுவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க