August 9, 2018
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து இன்று காலை பாலூற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் கடந்த 7ம் தேதி மாலை காலமானார்.
இதையடுத்து அவரது உடல் ,அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.அவருடைய நினைவிடத்தில் பொது மக்களும்,கட்சி தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது மகன்களுடன் வந்தார்.பின்னர் கருணாநிதியின் நினைவிடத்தில் பாலூற்றி மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதனைத்தொடர்ந்து அவரது மகன்களும் கருணாநிதிக்கு பாலூற்றி மரியாதை செலுத்தினர்.