August 8, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்.திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜாஜி ஹாலில் நேரில் அஞ்சலி செலுத்தினார்.