August 13, 2018
தண்டோரா குழு
என் தந்தை கடத்தப்பட்ட போது அவரை மீட்க உதவியவர் கருணாநிதி என மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகன் புனித் ராஜ்குமார் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.பின்னர் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள்,திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகன் புனித் ராஜ்குமார் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி மறைவிற்கு ஆறுதல் கூறுனார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார்,
“தலை சிறந்த தலைவர் கருணாநிதியின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு.என் தந்தை கடத்தப்பட்ட போது அவரை மீட்க உதவியவர் கருணாநிதி எனக் கூறினார்”.