• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதி நினைவேந்தலில் நிதின் கட்கரி,முரளிதரராவ் பங்கேற்பு – தமிழிசை சவுந்தரராஜன்

August 27, 2018 தண்டோரா குழு

ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தலில் நிதின் கட்கரி,முரளிதரராவ் பங்கேற்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து தற்போது கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 30ந் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் நினைவு கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,பரூக் அப்துல்லா,குலாம் நபி ஆசாத்,தேவகவுடா மற்றும் டெரிக் ஒ பிரையன் மற்றும் ஏராளமான தேசிய,தமிழக தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இதற்கிடையில்,கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதனால் இந்நிகழ்வில் அமித்ஷா கலந்துக் கொள்வாரா? என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில்,சென்னையில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,முரளிதர ராவ் கலந்து கொள்கின்றனர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.இதன் மூலம் இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துக் கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க