• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதிக்கு கடிதம் எழுதிய சிறுமியை சந்தித்த ஸ்டாலின்

August 3, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சிறுமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.தற்போது அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டம்,வேப்பம்பட்டைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மிக்கலே மிராக்ளின் என்பவர் கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி சமீபத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில்,

“எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும்.அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். உங்களுக்கு உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டவுடன் நான் அழுதேன்.உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை பண்னினேன்.தற்போது நீங்கள் நலமாக இருப்பதாக எனது தாய் என்னிடம் கூறினார்,எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.இப்போது நான் பள்ளிகூடத்திற்கு சந்தோசமாக செல்றேன்” என எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில்,சிறுமி மிச்செல் மிராக்லின் தனது தாய் ரோஸ்லினுடன் காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.அவரிடம்,நான் தாத்தாவை பார்க்க முடியுமா? என்று சிறுமி கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின்,”தாத்தா வீடு திரும்பியதும்,கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன்.நீ தாத்தாவிடம் பேசு” என்று கூறியதாக மிச்செல் மிராக்லினின் தாய் ரோஸ்லின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க