• Download mobile app
17 Feb 2026, TuesdayEdition - 3660
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் தன் சொந்த குரலிலேயே கருணாநிதி நன்றி தெரிவிப்பார் – ஸ்டாலின்

July 27, 2018 தண்டோரா குழு

விரைவில் தன் சொந்த குரலிலேயே கருணாநிதி நன்றி தெரிவிப்பார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 3 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட காவிரி மருத்துவமனை நிர்வாகம்,சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.நோய் தொற்று காரணமாக யாரும் அவரை நேரில் சந்திக்க வேண்டாம் என கூறியிருந்தது.

இதற்கிடையில்,நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் திமுக தொண்டர்களும்,கோபாலபுர இல்லத்தில் குவிந்த வண்ணமாக உள்ளனர்.பிரதமர் மோடி,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில்,இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி,ராகுல் காந்தி,சீதாராம் யெச்சோரி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.மேலும், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் நலம் பெற்று வருகிறார்.விரைவில் உடல்நலம் தேறி சொந்த குரலிலேயே கருணாநிதி நன்றி தெரிவிப்பார் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க