August 8, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கும் என தலைமைகழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார்.இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது.அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கோக் ரிகை விடுத்துள்ளார்.அதில் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும்,தொண்டர்கள் கலைந்து சென்றால் தான் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கும்.இட ஒதுக்கீட்டிற்காக போராடிய திமுக தலைவர் கருணாநிதிக்கு மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளார் என்றுக் கூறினார்.