• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை தலைவர் விட்டுச்சென்றுள்ளார் – துரைமுருகன்

August 14, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்,இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன்,செயல் தலைவர் ஸ்டாலின்,துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன்,

“அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடல்,சண்டை,மன வருத்தம் என எதுவும் இல்லாமல் கருணாநிதியுடன் இருந்தேன்.உறங்கும் நேரம் தவிர,மற்ற நேரம் அனைத்து நேரமும் அவருடன் இருக்கும் வாய்ப்பை பெற்றேன்.அறுவை சிகிச்சை மேற்கொண்ட எனக்கு இரண்டாவது முறையாக உயிர் கொடுத்தவர்.சுயமரியாதையை இழக்க கூடாது என அடிக்கடி கூறுவார்.திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி நமக்கு விட்டுச்சென்றுள்ளார். பெரியார்,அண்ணா,கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின்.இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை”. என்று பேசினார்

மேலும் படிக்க