August 1, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவகண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனைக்கு வெளியே பல ஆயிரம் தொண்டர்கள் “எழுந்து வா தலைவா,மீண்டு வா தலைவா” என கோஷம் எழுப்பிய படி காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில்,தற்போது 5-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி.இவர் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் நலம் பெற வேண்டி பலர் பிராத்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டம்,வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் மிக்கலே மிராக்ளின்.இவர் கார்மெல் பப்ளிக் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கருணாநிதியின் ரசிகை.இவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.தற்போது அந்த கடிதம் வைரலாகியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியது, இந்த கடிதம் டாக்டர் மு.கருணாநிதி தாத்தாவுக்கு…
“எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும்.அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். எப்பொழுது நீங்கள் நோய்வாய்ப்பட்டிற்களோ,நான் அழுதேன்.உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை பண்ணினேன்.நேற்று எனது தாய்,என்னிடம் கூறினார்,நீங்கள் தற்போது நலமாக இருக்கிறீர்கள் என்று,எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.இன்று நான் பள்ளிகூடத்திற்கு சந்தோசமாகவும் சென்றேன்” என எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை திமுக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.