August 7, 2018
தண்டோரா குழு
இந்திய அரசியலின் தனித்துவமான தலைவரை இழந்துவிட்டோம் என திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,கருணாநிதியின் மறைவிற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி இந்திய அரசியலின் தனித்துவமான தலைவரை இழந்துவிட்டோம் என இரங்கல் தெரிவித்துள்ளார்.