August 2, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதால் வெளியூரில் இருந்து வந்திருக்கும் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம் என்று கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியே வெளியூரில் இருந்து வந்த திமுக தொண்டர்கள் கருணாநிதியின் உடல்நிலை தெரிந்து கொள்வதற்காக காத்துக் கிடக்கின்றனர்.இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதால் வெளியூரில் இருந்து வந்திருக்கும் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம் என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் கனிமொழி எம்.பி. தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.