August 14, 2018
தண்டோரா குழு
நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.காமராஜர் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு திரையுலகினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்,ரஜினிகாந்த்,நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராதாரவி,பொன்வண்ணன்,விஷால் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது,அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாவதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி.மேலும் கலைஞர் கருணாநிதியின் உடலை இறுதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்க மறுத்திருந்தால் நானே போராட்டம் செய்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது. ஷூட்டிங்கும்,மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது;ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை.மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்ததுள்ளது. மேலும்,திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்கவே ரஜினிகாந்த் அதிமுகவை விமர்சிக்கிறார்