August 9, 2018
தண்டோரா குழு
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் கடந்த 7ம் தேதி மாலை காலமானார்.இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு,அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று கனமழையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொது மக்களும்,கட்சி தொண்டர்களும் இரவு முழுவதும் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் காலை முதல் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.