August 3, 2018
தண்டோரா குழு
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம்,முன்னாள் பிரதமர் தேவகவுடா நேரில் கேட்டறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூலை 27ம் தேதி ஏற்பட்ட திடீர் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதும்,அவரது உடல் நலம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் பிரதமர் தேவகவுடா நலம் விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கருணாநிதியை தொலைவில் இருந்து பாா்த்ததாகவும்,இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவராக விளங்கக்கூடிய கருணாநிதி 100 ஆண்டுகளை கடந்தும் நலமாக வாழ்வாா் என்று தொிவித்தார்.