July 28, 2018
தண்டோரா குழு
தமிழக அரசியல் வரலாற்றில் சகாப்தம் படைத்தவர் கருணாநிதி என்று ஜெ. தீபா பாராட்டு தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.தற்போது அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கலைஞர் குறித்து பேஸ்புக்கில் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஜெ.தீபா தனது பேஸ்புக் பதிவில்,
“தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி அவர்கள் 50 ஆண்டுகள் சகாப்தம் படைத்தவர்.அவர் ஆற்றிய நற்பணிகளை நாம் இந்நேரத்தில் நினைவு கூற வேண்டும்.ஐந்து முறை முதல்வராக தமிழக அரசியலில் ஜனநாயக தலைவராக செயல்பட்டு மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்டு ஆராய்ந்து செயல்படுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர் ஐந்து முறை முதலமைச்சராகவும் ஐம்பது ஆண்டு காலம் அரசியல் தலைவராகவும் இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிளும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றவர்.
தனி வாழ்த்து பாடல் இந்தியாவிற்கு தேசியகீதம்,தேசியக்கொடி,தேசிய சின்னம் இருப்பது போல் மாநிலங்களுக்கும் தனி சின்னம்,தனிக்கொடி,தனி வாழ்த்துப்பாடல் வேண்டும் என்று மத்திய அரசிடம் போராடியவர் கலைஞர்.ஆனால் தனி சின்னம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தையும், தமிழ்மொழி வாழ்த்து பாடலாக சுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்த்துப்பாடலையும் நமக்கு சட்டமாக்கி கொடுத்தவர் கலைஞர்.
காமராஜர் படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகத்தின் தடுப்புசுவராக தமிழ் மொழியின் பாதுகாவலராக இருந்தவர் கருணாநிதி.எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஒரு முறை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தனது அறைக்குத் தனிமையிலே கருணாநிதியை அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் விருந்து அளித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் திருஉருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.மகிழ்ச்சி அதற்கு கருணாநிதியும் மகிழ்ச்சியுடன்,’ உழைப்பே உயர்வு தரும் !’ என்று எழுதிக் கொடுத்தார்.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்”.என்று கருணாநிதி கூறினார்.இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.