August 7, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை கேட்டு துயரமடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று மாலை 6.10 மணியளவில் பிரிந்ததது.இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“நாட்டின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி.சிறந்த சிந்தனையாளர்,எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர்.அவரது மறைவைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.