August 7, 2018
தண்டோரா குழு
தமிழ்நாடு தனது தந்தையை இழந்துள்ளது என கருணாநிதி மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,கருணாநிதியின் மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“இந்தியா ஒரு சிறந்த புதல்வனை இழந்துவிட்டது.தமிழ்நாடு தனது தந்தையை இழந்துள்ளது. கலைஞரை இழந்த தமிழக மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார்.