August 7, 2018
தண்டோரா குழு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.அதன் பின்னர் அதிகாலை கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞரின் உடல் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் வீட்டிலும்,நள்ளிரவு 3 மணி வரை சிஐடி காலனி வீட்டிலும் வைக்கப்படும்.அங்கு,குடும்பத்தினர் மற்றும் உறவினர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை (ஆக.,8) அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது”.