August 10, 2018
தண்டோரா குழு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து,அவரது நினைவிடத்தில் 3வது நாளாக பல்வேறு ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,மாநிலங்களவையில் இன்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா,
கருணாநிதி 30 ஆண்டுகள் பொது வாழ்விலும்,50 ஆண்டுகள் திமுக தலைவராக பதவி வகித்துள்ளார். இதனால் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்றும்,இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.