August 9, 2018
தண்டோரா குழு
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காலமானார்.இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள்,பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில்,நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று கனமழையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொது மக்களும்,கட்சி தொண்டர்களும் இரவு முழுவதும் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் காலை முதல் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 9)காலை நடிகை த்ரிஷா கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கலைஞரின் மறைவு தமிழகத்துக்கும் தமிழ் திரையுலகுக்கும் பேரிழப்பு என்று தெரிவித்தார்.