August 1, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவகண்காணிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.இதற்கிடையில், இன்று நடிகர் விஜய் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் இன்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில்,காவிரி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் அஜித் குமார் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.