• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 4-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

December 26, 2016 தண்டோரா குழு

திமுக பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 20-ம் தேதி நடைபெற இருந்தது. கட்சித் தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டிசம்பர் 15ம் தேதி சேர்க்கப்பட்டார். இதனால் பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து கருணாநிதி டிசம்பர் 23 ம் தேதி இல்லம் திரும்பினார்.

அவர் நலமுடன் இல்லம் திரும்பியதை அடுத்து ஜனவரி 4-ம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்பழகன் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4 ம் தேதி நடைபெறும்.

தி.மு.கழக ஆக்கப் பணிகள் மற்றும் தணிக்கைக் குழு அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழினை இக்கூட்டத்திற்கு வரும்போது தவறாமல் உடன் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் அன்பழகன்.

மேலும் படிக்க