December 16, 2016
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு திமுக பொதுக் குழுவை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து கடந்த டிசம்பர் 7 ம்தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரேனே நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வியாழன்று சென்னை காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையெடுத்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்த திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒளிவு மறைவின்றி அவரது உடல்நலம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.
மேலும், திமுக பொதுக்குழு வரும் 20 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து கேட்டதற்கு, பொதுக்குழுவை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறினார்.