• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக பெண் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

October 26, 2016 தண்டோரா குழு

சென்னையில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம் அருகே சேலையூரில் வசித்துவருபவர் ரேணுகாதேவி ( 37). இவர் பரங்கிமலை ஒன்றிய தி.மு.க. மகளிரணி துணை அமைப்பாளராக உள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களையும் நடத்தி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை காலையில் தனது மகளை பள்ளிக் கூடத்தில் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இவரிடம் மூன்று பேர் ஏதோ ஒரு முகவரியைக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் ரேணுகா தேவியின் தாடையில் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று விட்டனர்.பலத்த காயமடைந்த ரேணுகாதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மூன்று மர்ம இளைஞர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் ஒரு பெண்ணை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க