October 17, 2018 
தண்டோரா குழு
                                இந்தியாவில் #Metoo  என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeToo இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தலை கண்டிக்கும் வகையில் அதற்க்கு ஆதரவாக இருந்து வரும் சினிமா பிரபலங்களில் சித்தார்த்தும் ஒருவர்.இதற்கிடையில்,இயக்குனர் சுசிகணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக,கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார்.இதனால் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்,லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மீடூ வால் பெண்களுக்கு வேலையில்லா நிலை ஏற்படும் எனவும் கடுமையாக சாடினார்.மேலும்,மீடூ வை பயன்படுத்தி தவறு செய்யாத ஆண்களையும் தாக்குபவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் சுசிகணேசன் கூறியிருக்கிறார் இதையடுத்து,லீனாவுக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த் ட்வீட் செய்திருந்தார்.  
இந்நிலையில் நடிகர் சித்தார்த் பரபரப்பு தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில்,”நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசிகணேசன் என் வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன்.தைரியமுடன் போராடுங்கள் சகோதரி” என பதிவிட்டுள்ளார்.