• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிட்லி புயலுக்கு ஆந்திராவில் 8 பேர் பலி

October 11, 2018 தண்டோரா குழு

டிட்லி புயலுக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம்,விஜயநகரம் மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கக்கடலில்,சென்னைக்கு தென் கிழக்கில் உருவான டிட்லி என்ற பெயரிடப்பட்ட அதிதீவிர புயல்,நேற்று (அக்.,10) மாலை,ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு இடையே 200 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது.

இப்புயலால் ஆந்திராவின் விசாகப்பட்டினம்,விஜய நகரம்,ஸ்ரீகாகுளம்,ஒடிசாவின் கஜபதி,கஞ்சம்,குர்தா,நயாகார் மற்றும் புரி ஆகிய மாவட்டங்களில்,கடும் பாதிப்பு ஏற்படும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இதையடுத்து இப்புயல் மணிக்கு 14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் ஆந்திரா- ஒடிசா இடையே கரையை கடந்தது.

இந்நிலையில்,புயல் காரணமாக ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.டிட்லி புயல் காரணமாக 2 மாவட்டங்களிலும் மின்சாரம், தொலைதொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மேலும் படிக்க