• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு விடுதலை ஆளுநர் மாளிகை விளக்கம்

November 20, 2018 தண்டோரா குழு

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேர் விடுதலை குறித்து பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறையில் உள்ள 18௦௦ கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய,தமிழக அரசு முடிவு செய்தது.

அதில்,பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர்,60 வயதிற்கு மேற்பட்டோர்,5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் என்ற அடிப்படையில் கைதிகளை தேர்வு செய்து,அவர்களை விடுதலை செய்யும்படி, ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்தது.அதன்படி சுமார் 1800 ஆயுள் தண்டனைக் கைதிகள் தமிழகச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு பரிந்துரை செய்த பட்டியலில்,தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி,ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மூன்று பேரின் பெயர்கள் இருந்தன. இதனையடுத்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன்,ஆளுநர் கலந்தாலோசித்தார்.அதன்பின் அந்த மூன்று பேர் தொடர்பு உடைய கோப்புகளை அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.மேலும்,அவர்களை விடுவிக்க கோரும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில்,தமிழக அரசு அவர்களை விடுவிக்க கோரி மீண்டும் ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியது.இச்சூழ்நிலையில் மூன்று பேரையும் விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

அதில், “சட்டவிதிகளுக்கு உட்பட்டே மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.13 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று தலைமை வழக்கறிஞரும்,தலைமை செயலாளரும் கூறினர்.அவர்கள் வெளியே வந்தால் சமுதாயத்திற்கு ஏந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்திய பிறகே அவர்களது விடுதலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க