January 19, 2018
தண்டோரா குழு
டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்த வந்த திருப்பூர் மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.அங்கு வைத்து சரத்பிரபுவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான திருப்பூர் எடுத்து செல்லப்பட்டு, இன்று(ஜன 19) காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.